
2023 ஆம் ஆண்டு முதலாவது தொடரூந்து போக்குவரத்து..?
மாத்தறை - கதிர்காமம் தொடருந்து வீதி, பெலியத்த தொடக்கம் ஹம்பாந்தொட்ட வரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள் மற்றும் நிலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இவ்வருடத்தில் நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு கட்டுமான பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதுடன், 2023 ஆம் ஆண்டு முதலாவது தொடரூந்து போக்குவரத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.