சட்டவிரோத கருக்கலைப்பு மையம் சுற்றிவளைப்பு - 11 பேர் கைது (காணொளி)

சட்டவிரோத கருக்கலைப்பு மையம் சுற்றிவளைப்பு - 11 பேர் கைது (காணொளி)




நிட்டம்புவ பிரதேசத்தில் நீண்ட காலமாக இரகசியமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

நிட்டம்புவ காவற்துறையினால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவர் ஒருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 பெண்கள் மற்றும் 04 ஆண்கள் உட்பட சேவையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருகலைப்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த கருகலைப்பு நடவடிக்கைக்கு 40 ஆயிரம் ரூபா பெற்றுக் கொள்ளப்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.