
தேர்தல் சட்டத்தினை மீறல் - 5 ஆயிரத்து 814 முறைப்பாடுகள்
தேர்தல் சட்டத்தினை மீறிய சம்பவம் தொடர்பில் 5 ஆயிரத்து 814 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் புதன் கிழமை வரை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களில் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் குறித்த காலப்பகுதியில் தற்போது வரை வன்முறை சம்பவஙகள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.