மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!

அம்பாந்தோட்டை - பெலியத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை! | Death Sentence Husband Killed His Wife Tangalle

இச்சம்பவத்தில் ரணசிங்க ஆராச்சிகே தினுஷா லக்மாலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு இன்றையதினம் நீதிமன்ற விசாரணைக்கு வந்த போதே தங்காலை மேல் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்கவினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் குமார என்ற 41 வயதுடைய நபரொருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.