
முடியாது எனக்கூறி நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு...!
எதிர்வரும் 03 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் முன்வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதனால் எதிர்வரும் 3 ஆம் திகதி ஒவ்வொரு இல்லமாக சென்று சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பௌணர்மி தினத்தன்று பிரசாரங்களில் ஈடுப்பட்டால் மதவழிபாடுகளுக்கு பாதகம் ஏற்படும் என்பதோடு நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளுக்கும் பாதகம் ஏற்படும் என தெரிவித்து குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 02 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பதாக அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி கொள்ள வேண்டும் என அந்த ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.