கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜூன் மாதம் 1400 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வேலையற்றோர் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதோடு, கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாகவும், ஜூன் மாதம் 6.4 வீதமாகவும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை | The Number Of Unemployed In Canada Has Increased

மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வேலையற்றோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.5 வீதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.