மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதிகள்

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதிகள்

பொலன்னறுவை ஹபரணை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதிகள் முற்றுகையிடப்பட்டன

இதன்போது நான்கு முகாமையாளர்கள் மற்றும் சேவை வழங்கிய 11 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

ஹிங்குரகொட நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட உத்தரவிற்கமைய, இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் மொனராகலை, சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலன்னறுவை குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதிகள் | Police Ride In Polonnaruwa Today

திம்புலாகல தலுகானை, ஹபரணை, களனி, மொனராகலை, பூனானி, அனுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 19, 27, 33, 47, 33, 48 வயதுடைய பெண்கள் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண்களுக்கு மிகவும் குறைந்த ஊதியம் வழங்கியதுடன், பெருந்தொகை பணத்தை லாபமாக குறித்த முகாமையாளர்கள் பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதிகள் | Police Ride In Polonnaruwa Today

பொலிஸாரின் முற்றுகைக்குள்ளான நான்கு நிலையங்களும் அந்தப் பகுதிகளில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.