மோட்டார் சைக்கிளில் வந்த எமன்... பரிதாபமாக உயிரிழந்த பெண்!

மோட்டார் சைக்கிளில் வந்த எமன்... பரிதாபமாக உயிரிழந்த பெண்!

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியில் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் கடந்த 27-06-2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த எமன்... பரிதாபமாக உயிரிழந்த பெண்! | Woman Killed In Motorcycle Accident Embilipitiyaகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மித்தெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதியும் பெண் பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.