சற்று முன்னர் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி...!
நாட்டில் போபதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்க தாம் முன்னின்று செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க களனிய ரஜமகா விகாரையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் தன்னுடைய திட்டங்களை முன்னெடுத்த செல்ல பலமான நாடாளுமன்றம் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்
இதற்கிடையில் ஜா-எல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி மக்களின் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்
கம்பஹா வாழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்கள் தம்மிடம் உள்ளதாகவும் விரைவில் அவர்களின் பிரச்சினைகளுக்கான தீரவு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்