தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) தெரிவித்துள்ளது.

வட்டவளை (Watawala) தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (28) பொடி மெனிகே தொடருந்து தடம்புரண்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் குறித்த மார்க்கத்துடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Podi Menike Train To Derail Railway Departmentஇதேவேளை மீரிகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தொடருந்து பாதையில் நேற்று (27) பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக பிரதான பாதையில் சேவையில் ஈடுபடும் தொடருந்து தாமதமாக புறப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.