நுவரெலியாவில் பொது மலசலகூடத்தில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

நுவரெலியாவில் பொது மலசலகூடத்தில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

நுவரெலியா(Nuwara Eliya) பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்பபோது நேற்று (26) இரவு நுவரெலியா பிளாக்பூல், ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும் இன்றைய தினம் (27) ஆரியபுர, பொகவந்தலாவையை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் மலசல கூடத்தில் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவ உதவி அதிகாரிகள் இவர்கள் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நுவரெலியாவில் பொது மலசலகூடத்தில் இருந்து இரு சடலங்கள் மீட்பு | Two Dead Bodies Recovered From Nuwara Eliya

இதனையடுத்து நேற்றைய தினம் மலசல கூடத்தில் இறந்த முதியவரின் சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நுவரெலியா மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சடலங்கலாக மீட்கப்பட்டவர்கள் மலசல கூடத்தில் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.