தனியார் கம்பனியில் மின்சாரம் தாக்கி ஆபத்தான் நிலையில் இளைஞர்கள்

தனியார் கம்பனியில் மின்சாரம் தாக்கி ஆபத்தான் நிலையில் இளைஞர்கள்

புதுக்குடியிருப்பு தனியார் கம்பனி ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது .

சம்பவத்தில் வேணாவில் மற்றும் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் கம்பனியில் மின்சாரம் தாக்கி ஆபத்தான் நிலையில் இளைஞர்கள் | Youth In Critical Condition Due To Electric Shockபுதுக்குடியிருப்பு சந்தியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குறித்த கம்பனியின் தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க கட்டட மேல்பகுதிக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

மேலே சென்றவரை காணவில்லை என அருகில் உள்ள பலசரக்கு கடையில் பணிபுரியும் ஊழியர் கட்டட மேற்பகுதிக்கு சென்றபோது அவரும் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டார்.

தனியார் கம்பனியில் மின்சாரம் தாக்கி ஆபத்தான் நிலையில் இளைஞர்கள் | Youth In Critical Condition Due To Electric Shockஇதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

தனியார் கம்பனியில் மின்சாரம் தாக்கி ஆபத்தான் நிலையில் இளைஞர்கள் | Youth In Critical Condition Due To Electric Shock