பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க 14பேர் கொண்ட இங்கிலாந்து அணியையும், 4 மேலதிக வீரர்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் வெற்றியில் பங்கெடுத்த ஆறு வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர், டோம் பெஸ் ஒரே சுழற்பந்து வீச்சாளராக இருந்தார்.

4 மேலதிக வீரர்களில் ஜெக் லீச்சும் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், மேலதிக விக்கெட் காப்பாளராக பென் போக்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிரேஸி, டேன் லோரன்ஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சரி தற்போது அணியின் 14பேர் கொண்ட விபரத்தை பார்க்கலாம்.

ஜோ ரூட் தலைமையிலான அணியில் ஜேம்ஸ் எண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸெக் கிரெவ்லி, சேம் கர்ரான், ஒல்லி போப், டோம் சிபிலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, ஒகஸ்ட் 5ஆம் திகதி மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.