இலங்கையர்களிடம் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையர்களிடம் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை!

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வழங்கிய 69 லட்சம் வாக்குகளுக்கு பதிலாக 79 லட்சம் வாக்குகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி நேற்று கலந்துக்கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டை சீரமைக்கும் பணி தனக்கே உள்ளதால், அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்ற வேண்டிய சட்டத்திட்டங்கள் உள்ளன. இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.