தங்க விலையில் திடீர் மாற்றம் : இன்றைய நிலவரம்

தங்க விலையில் திடீர் மாற்றம் : இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

எனினும் கடந்த சில தினங்களாக இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (18) சடுதியாக அதிகரித்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது. 707,906 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 24,980 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 199,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : இன்றைய நிலவரம் | Srilanka Gold Price Gold Rate World Gold Marketஅதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 183,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,860 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 174,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 192,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம் : இன்றைய நிலவரம் | Srilanka Gold Price Gold Rate World Gold Marketஇதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 177,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.