கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

பொலன்னறுவ – லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

குறித்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 317 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 483 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 80 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம் இந்த கொடிய வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.