வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல்

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.

அத்துடன், சேவையில் ஈடுபடுவோர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் விசேட கடன் வசதிகளை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சு, ஆயுதப் படைகள், போர் வீரர்கள் சேவை அதிகார சபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல் | Foreign Employment For Pensioners Army Officers

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காணிகளுக்கான ‘பரம்பரை’ திட்டத்தின் கீழ், போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்போது அனுபவிக்கும் காணிகளின் உரிமைக்கான அனுமதிப்பத்திரம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு இம்மாத இறுதியில் முதலாவது குழு இஸ்ரேல் (israel) செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.