மரம் விழுந்ததில் தீப்பற்றிய வீடு; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

மரம் விழுந்ததில் தீப்பற்றிய வீடு; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

நுவரெலியாவில் பம்பரகலை பகுதியில் இன்று காலை (28) வீடொன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் மின் கம்பி அறுந்து விழுந்து வீடு தீப்பற்றியுள்ளது.

இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்களும் பெறுமதியான பொருட்களும் சேதமடைந்துள்ளன.

வீட்டில், வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை காற்றின் வேகம் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து வீட்டினுள் தீ பற்றி எரிந்துள்ளது.

மரம் விழுந்ததில் தீப்பற்றிய வீடு; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள் | House On Fire After Falling Tree Nuwara Eliya

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தீப்பரவலுக்கு மின் ஒழுக்குகே காரணம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். மேலும் தீயினை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாகவூம் கூறப்படுகின்றது.