மனைவியின் தகாத உறவை கண்டதால் கணவன் கொலை; இலங்கையில் பயங்கரம்

மனைவியின் தகாத உறவை கண்டதால் கணவன் கொலை; இலங்கையில் பயங்கரம்

 ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரங்கொடபாலுவ பகுதியில் மனைவியின் தகாத உறவை கண்டதால்  ,கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுகணவன்  கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம, நாரங்கொடபாலுவ பகுதியைச் சேர்ந்த 42 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மனைவி நபரொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் கையும் மெய்யுமாக மனைவி சிக்கியுள்ளார்.

மனைவியின் தகாத உறவை கண்டதால் கணவன் கொலை; இலங்கையில் பயங்கரம் | Husband Killed Wife S Inappropriate Relationship

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி, பெண்னின் கணவனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரும் உயிரிழந்தவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.