யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்  (20) மாலை 4:00மணியளவில் அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜா தயா( வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி மின் கம்பத்துடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் | Family Member Died In A Motorcycle Accident Jaffnaஉயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று சோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.