யாழில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள குடும்பப் பெண்

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள குடும்பப் பெண்

யாழ் - தாவடி(Jaffna) பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இவர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். எனினும் அதிகாலை வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள குடும்பப் பெண் | Body Of The Young Woman Was Recovered

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலைலயில், சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.