கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் மோசடிகள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் மோசடிகள்!

க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 14 மாணவர்களுக்கு புவியியல் வினாத்தாளில் சில பிரிவுகள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் மோசடிகள்! | Scams In The G C E Ordinary Level Examination

அதேபோல், இரணடு விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பரீட்சை மேற்பார்வையாளர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்றையதினம் முடிவடைந்த சாதாரண தரப் பரீட்சையில் பிழைகள் காணப்பட்டதாகவும் மற்றும் பரீட்சை நிலையங்கள் சிலவற்றில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் மோசடிகள்! | Scams In The G C E Ordinary Level Examination

இவ்வாறான சூழலில் மினுவங்கொடை கல்வி வலயத்தின் அல்ஹமான் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் தமிழ் மொழி மூல பரீட்சையில் தோற்றிய 14 மாணவர்களுக்கு புவியியல் பாடத்தின் முதலாவது வினாத்தாள் மற்றும் வரைப்பட பகுதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.