யாழில் யுவதியின் முடிவால் கதறும் குடும்பம்
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் மரியதாஸ் கிருபாகினி வயது 26 என்ற இளம் யுவதியை உயிரிழந்தவர் ஆவார் .
நேற்று மாலை தனக்கு தானே தீ மூட்டிய இளம் யுவதி உயிரிழந்துள்ளார். மனஅழுத்தம் காரணமாக விபரீத முடிவு எடுத்து தனக்கு தானே தீ மூட்டி உடலில் தீக்காயங்களுக்கு உள்ளாகி யுவதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு தானே தீ மூட்டி யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.