மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை

மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.

இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்த போக்கு காணப்படுகிறது.

இதன்படி, இன்றைய தினம் (08.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலையானது 24460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை: இன்று பதிவாகியுள்ள நிலவரம் | Gold Price Today In Sri Lankaஅத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22430 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாகவும் உள்ளது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,410 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 171250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.