நாடளாவிய ரீதியில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (29) சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொள்ள பொருளாதார அபிவிருத்தி சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த போராட்டத்திற்காக 11 பிரதேச செயலகங்களின் 320 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விடுமுறை எடுக்க உள்ளதாக திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் பரமேஸ்வரன் லோஜினி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பின்வரும் கோரிக்கைகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ளனர்,

1.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தினுடைய நிர்வாகச் செலவில் மூன்றில் ஒரு பகுதி அதிகரிக்கப்பட வேண்டும்.

2.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

நாடளாவிய ரீதியில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம் | Economic Development Officials Protest Srilanka3. பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக கொடுப்பனவுகள் 3000 ரூபாவாக வழங்கப்பட வேண்டும்.

4.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர அலுவலக உபகரணங்கள் அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.