துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு..!
மின்னேரிய - கிரித்தலே பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரித்தலை பகுதியைச் சேர்ந்த ஜே.ஐ.கோசலா சாமோத்ய பண்டார என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி மாணவி தனது வீட்டுக்குப் பக்கத்து வீடொன்றில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
ஹிகுராக்கொட வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அங்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அண்மையில், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.