கொரோனா இரண்டாவது அலை- ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக்கப்பட்ட சட்டங்கள்!

கொரோனா இரண்டாவது அலை- ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக்கப்பட்ட சட்டங்கள்!

கொரோனா இரண்டாவது அலை ஏற்படும் அபாய நிலை காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் சட்டங்களை கடுமையாக்குவதில் அவதானம் செலுத்தி வருகின்றன.விசேடமான ஸ்பெய்ன், ஜெர்மனி ஆகிய நாடுகள் தற்போது வரையில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணும் பகுதிகளில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தற்போது வெப்பமான காலநிலை நிலவி வருவதன் காரணமாக ஐரோப்பியர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ள நிலையில் அதில் பெரும்பாலான மரணங்கள் ஐரோப்பிய நாடுகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.