2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

புத்தாண்டு விடுமுறைக்கு பின், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் கட்ட கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்குவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மே மாதம் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் இன்று ஆரம்பம் | Second Phase Educational Activities Begin Todayஅதேவேளை, முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மே 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகளை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.