கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டு!

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டு!

வவுனியா (Vavuniya) கடவுச்சீட்டு அலுவலகத்தில் (Passport office) இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் அதிகளவான பணத்தினை வழங்கி மிக இலகுவாக கடவுச்சீட்டை பெற முடியவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோசடி விவகாரம் தொடர்பில் மக்கள் மேலும் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்தில் (Vavuniya Immigration Department)  கடவுச்சீட்டு பெறுவதற்காக வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

 

 

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டு | Passport Fraud In Vavuniya Passport Office

இந்நிலையில் ஒருநாள் கடவுச்சிட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டை பெறுவதற்காக வரும் மக்கள் அதிகாலையிலேயே இரு வரிசையில் காத்திருக்க வேண்டும். 

காத்திருப்போருக்கு காலை 6 மணியளவில் கடவுச்சிட்டு அலுவலகத்தால் இலக்கம் வழங்கப்பட்டு கடவுச்சிட்டு பெற வருவோர் உள்வாங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி : அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டு | Passport Fraud In Vavuniya Passport Office

இதன்போது, வரிசையில் இரவு பகலாக பலரும் காத்திருக்கும் நிலையில், ஒருவருக்கு தலா 5000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை பெற்று வரிசையில் காத்திருக்காமலேயே இலக்கங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு கடவுச்சிட்டு அலவலக காவலாளிகள் உட்பட அதிகாரிகள் வரை உடந்தையாக செயற்படுவதாகவும் பொலிஸாரும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.