அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய இணைய வழி வீசா..!

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய இணைய வழி வீசா..!

இணைய வழியான புதிய வீசா முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) தெரிவித்துள்ளது. 

கப்பல் மார்க்கமாக  இலங்கை வரும் பயணிகளுக்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நான்கு நாட்களுக்கு இந்த இணைய வழியான புதிய வீசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் நிமல் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக 25 டொலர் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.