தவறான உறவால் மின்சார சபை ஊழியர் கொடூர கொலை... 35 வருடங்களுக்கு பின் சிக்கிய சந்தேக நபர்!

தவறான உறவால் மின்சார சபை ஊழியர் கொடூர கொலை... 35 வருடங்களுக்கு பின் சிக்கிய சந்தேக நபர்!

நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றையதினம் (18-04-2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சார சபையின் பொறியாளர் ஒருவரை கொலை செய்து உடலை துண்டுத் துண்டாக வெட்டி மறைத்து வந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக குற்றச்சாட்டப்பட்டு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான உறவால் மின்சார சபை ஊழியர் கொடூர கொலை... 35 வருடங்களுக்கு பின் சிக்கிய சந்தேக நபர்! | Murder Due To Abusive Relationship Suspects Arrestசந்தேக நபர் 68 வயதுடையவர் எனவும், அவர் தனது தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் தனது அடையாளத்தை காண முடியாத வகையில் மாற்றியமைத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதான சந்தேகநபரின் மனைவியும் மறைந்திருந்த நிலையில் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.