லண்டனில் நடந்த இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்... ஆபத்தான நிலையில் பெண் பொலிஸ் அதிகாரி

லண்டனில் நடந்த இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்... ஆபத்தான நிலையில் பெண் பொலிஸ் அதிகாரி

லண்டனில் பிரதமர் இல்லம் அருகாமையில் நடந்த இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், குதிரையில் வலம்வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குதிரைப்படையை சேர்ந்த அந்த அதிகாரி திட்டமிட்டு வீழ்த்தப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இதில், அந்த பொலிஸ் அதிகாரியின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலா எலும்புகள் நொறுங்கியுள்ளதாகவும் மட்டுமின்றி தோள்பட்டை எலும்பும் உடைந்துள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பெண் அதிகாரி காயங்களில் இருந்து மீண்டுவர சுமார் 4 மாதங்களுக்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.