யாழில் பெரும் சோகம்: வெளிநாட்டு உறவினர்களுக்காக... இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் பெரும் சோகம்: வெளிநாட்டு உறவினர்களுக்காக... இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாண பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றையதினம் (10-04-2024) இடம்பெற்றுள்ளது.

யாழில் பெரும் சோகம்: வெளிநாட்டு உறவினர்களுக்காக... இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! | Person Climbing Palm Tree Fell And Died Jaffna

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் (41 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்: வெளிநாட்டு உறவினர்களுக்காக... இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! | Person Climbing Palm Tree Fell And Died Jaffna

இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் கூற்று சோதனைக்கு பிறகு குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.