
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 23 ஏக்கர் 12 பேர்ச் காணியை காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க அரசாங்கம்(Government) தீர்மானித்துள்ளது.
இதற்காக அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் துறைமுக அதிகாரசபை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு முற்பணமாக 52 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றி அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் 6(1) பிரிவின் கீழ் தெளிவான உரிமையுடன் உரிய காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு மானியமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.