மனைவியை கொன்று உடலை 200 துண்டுகளாக வெட்டிய கணவன் : பிரித்தானியாவில் பரபரப்பு!!

மனைவியை கொன்று உடலை 200 துண்டுகளாக வெட்டிய கணவன் : பிரித்தானியாவில் பரபரப்பு!!

பிரித்தானியாவில் லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து பின்னர் உடலை 200 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் என்ற நபரே தனத மனைவியான ஹோலி பிராம்லி (வயது 26) என்பவரை இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு திருமணமாகி 1 ½ ஆண்டுகள் ஆகின்றதோடு, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று நிக்கோலஸ் மெட்சன் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி  சமையல் அறையில் உள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார்.

மனைவியை கொன்று உடலை 200 துண்டுகளாக வெட்டிய கணவன் : பிரித்தானியாவில் பரபரப்பு | Husband Killed Wife Cut Body Into 200 Pieces Ukபின்னர் மனைவியின் உடல் பாகங்கள் இருந்த பிளாஸ்டிக் பைகளை ஆற்றில் வீசியுள்ளதோடு இதற்கு அவரது நண்பன் ஒருவர் உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றிய பொலிஸார் நிக்கோலஸ் மெட்சனை கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.