நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் பர்ஸ்ட்லுக் குறித்து மாரிசெல்வராஜ்

நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் பர்ஸ்ட்லுக் குறித்து மாரிசெல்வராஜ்

நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக திரையுலக பிரமுகர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களிலும், போனிலும் தனுசுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடித்த இரண்டு படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ படத்தின் ’ரகிட ரகிட’ என்ற பாடல் இன்று வெளியாகி உள்ளது என்பதும் அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். ”நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என்ற கேப்ஷனுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த டைட்டில் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீசாகும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.