அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்! பிரதமர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்! பிரதமர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் எதிர்வரும் மே மாத முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால்(Dinesh Gunawardena) சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க(Anura Dissanayake) இந்த உறுதிமொழியை வழங்கியதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எச்.ஏ.எல். உதயசிறி தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்! பிரதமர் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை | Government Employee Salary In Sri Lanka

இந்த உறுதிமொழி காரணமாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவிருந்த இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரட்ன ஆகியோருடன் தமது சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதன்போது குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.