கட்டுநாயக்கவை உலுக்கிய கோர விபத்து!
ராகம பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதியதில் பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்து காரணமாக ரயில் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் அருகில் இருந்த மரக்கறி விற்பனை நிலையம் பலத்த சேதம் அடைந்ததுடன் அதன் உரிமையாளர் அதனை பூட்டி விட்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கொலன்னாவையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ரயில் இன்ஜின் சேதமடைந்துள்ளதாகவும், லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.