
பிரித்தானியாவில் ஒரு மில்லியன் பவுண்டுகள் ஈட்டி சாதித்த ஈழத்து இளைஞன்!
பிரித்தானியாவில் விற்கப்படாத உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்த ஈழத்து இளைஞன் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக வருமானத்தைப் பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இனோ ரட்ணசிங்கம் எனும் 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு வெறும் 17 மாதத்தில் இந்த நிலையை அடைந்துள்ளார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பிரித்தானியாவின் பல்பொருள் அங்காடிகளில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை மாத்திரமே விற்பனைக்கு வைக்கிறேன்.
எசெக்ஸ், ஹாட்லீ ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எனது கடைகள் மிகுந்த ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், தற்போது எமது இரண்டாவது கடையை Canvey Island பகுதியில் விரைவில் திறக்கவுள்ளேன்.
கேன்வே தீவு மற்றும் எசெக்ஸ் பகுதி மக்கள் எமது தயாரிப்புகளுக்கு பைத்தியமாக இருக்கிறார்கள்.
எனது அப்பாவுக்கு ஏற்கனவே தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. அவரின் ஆலோசனைக்கு அமைய நான் எடுத்த இந்த புதுமுயற்சிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.
இதே ஆதரவு தொடர்ந்து கிடைக்குமானால் ஒரு நாள் மில்லியனர் ஆக முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.