வேகமாக உயர்ந்த இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

வேகமாக உயர்ந்த இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும் போது(28.03.2024)  இன்றையதினம்(01.04.2024)அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி சிறிது உயர்வடைந்துள்ளதுடன்,  விற்பனை பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (01.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

dollar rate in sri lanka

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 226.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 217.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 330.87 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 317.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

dollar rate in sri lanka

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 386.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  371.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.