லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்: வழங்கப்பட்ட கடுழிய தண்டனை..!

லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்: வழங்கப்பட்ட கடுழிய தண்டனை..!

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய காவல்துறை உத்தியோகத்தருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்திருந்தது.

அதன்படி 4 குற்றச்சாட்டுக்களுக்கும் சந்தேகநபர் சார்ஜன்ட் குற்றவாளி என நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்: வழங்கப்பட்ட கடுழிய தண்டனை | Police Sergeant Bribe Sentenced To Prisonமேலும், சந்தேகநபரான காவல்துறை உத்தியோகத்தர் மீது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.