லைக்கா ஞானம் அறக்கட்டளையால் 50 புகையிரத நிலையங்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி

லைக்கா ஞானம் அறக்கட்டளையால் 50 புகையிரத நிலையங்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி

அனைத்துலக நீர் தினத்தினை முன்னிட்டு லைக்கா ஞானம் அறக்கட்டளையினர் இலங்கை முழுவதும் அமைந்துள்ள 50 புகையிர நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதியினை உருவாக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

முதற் தொகுதியாக 50 புகையிரத நிலையங்களுக்கான குடிநீர் வழங்கல் செயற்பாடுகள் ஆரம்பிக்கபடவுள்ளமையுடன் ஏனைய புகையிரத நிலையங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவுநர் அல்லிராஜா சுபாஸ்கரனின் வழிப்படுத்தலில் குறித்த குடிநீர் வழங்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது. மேலும் லைக்கா ஞானம் அறக்கட்டளையினூடாக மாத்தறை பனவில கிராமத்துல் நூறுக்கு மேற்பட்ட மக்களுக்கான குடிநீர் பெற்றுக்கொள்ளுவதற்கான குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அனைத்துலக நீர் தினத்தினை முன்னிட்டு லைக்கா ஞானம் அறக்கட்டளையின் 25 மாவட்ட சமுதாயக் கூடத்தில் பாடசாலை மாணவர்களுக்கான சித்திர திருவிழாவும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.