நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேஷு மாரடைப்பால் காலமானார்

நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேஷு மாரடைப்பால் காலமானார்

நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேஷு மாரடைப்பால் இன்று (26) காலமானார்.

மாரடைப்பு காரணமாக கடந்த 15ஆம் திகதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக லட்சுமி நாராயணன் சேஷு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று வீடு திரும்பிய நிலையில் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

60 வயதான இவர் பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக ஏ -1 , பாரிஸ் ஜெயராஜ், வடக்குபட்டி ராமசாமி போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

சின்னத்திரையில் லொள்ளு சபா என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் இவர் பிரலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது மறைவிற்கு இரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.