கொரோனா நோயிலிருந்து மக்களை மீட்க சுதர்சன யாகம்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை மீட்பதற்க்கான வேண்டுதல் பால் குட பவனியும் மகா சுதர்சன யாகமும் வடமராட்சி- துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று (செவ்வாயக்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற இந்த யாகம் உலகில் இடர்கள் வருகின்றபோது இடர்களிலிருந்து மக்களை காக்கவேண்டியும் கிருஸ்ண பகவானின் ஆசி வேண்டியும் இடம்பெறுவது முக்கியமானது.
இந்நிலையில் இந்த மகா சுதர்சன் யாகம் இன்று காலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு முன்னதாக காலை 6 மணியளவில் பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் ஆலயத்திலிருந்து 108 பால் குட பவனியாக வல்புர ஆழ்வார் ஆலயத்திற்கு மந்திகை ஊடாக பால் குட பவனியாக பால் கொண்டு வந்தே இவ்மகா சுதர்சன் யாகம் வரல்லிபுர ஆழ்வாரில் இடம்பெற்றது.