கொழும்பு வெள்ளவத்தையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து!

கொழும்பு வெள்ளவத்தையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து!

கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் சற்றுமுன் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள நோலிமிட் என்னும் ஆடை விற்பனை நிலையத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கடைக்குள் உள்ளிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அங்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் களத்தில் இருக்கும் எமது ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

அதேவேளை, தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

GalleryGallery