யாழில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

யாழில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம், கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய பெர்னான்டோபிள்ளை அருள்நேசன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரண்டு மீனவர்கள் ஒரு படகில் தொழிலுக்கு சென்றுள்ளனர். குறித்த படகு கவிழ்ந்த நிலையில் கிறிஸ்தோபர் ஜென்ஸ்போல் என்ற மீனவர் தொழிலுக்கு சென்ற மீனவர்களின் உதவியுடன் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் தொழிலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் பயணித்த படக்கு காற்றினால் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.