மகனை மீட்டுத்தருமாறு கண்ணீர் விட்ட தாய்!

மகனை மீட்டுத்தருமாறு கண்ணீர் விட்ட தாய்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றையதினம் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறீதரனிடம் அதே பகுதியை சேர்ந்த தாயொருவர் தனது 17 வயது மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், கடந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு குடும்ப கஷ்டம் காரணமாக முந்திரிகை விதைகளை விற்றுவந்த மகனை துப்பாக்கிச் சன்னங்கள் வைத்திருந்தார் என குற்றம் சாட்டி இராணுவத்தினர் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எவ்வித ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. வீட்டில் இருந்து காசு வாங்குவதற்காக சந்திக்கு சென்ற எனது மகனிடம் எவ்வாறு புதிய துப்பாக்கி சன்னங்கள் வந்தது. இவை திட்டமிட்டு மேர்கொள்ளப்பட்டுள்ள விடயம்.

எனது ஒரே ஒரு மகனை கடந்த 42 நாட்களாக சிறையில் விட்டு விட்டு மிகவும் மன உழைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம் என குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவருடன் சேர்த்து மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.