
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பயணித்த கார் விபத்து!
இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(14) அனுராதபுரம் திரப்பனே வீதியில் 117 ஆம் இலக்க மைல்கல் அருகில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், அவர் பயணித்த கார் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த லஹிரு திரிமான்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.