இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில்  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளதாகவும், இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 0.8 வீத சரிவை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Central Bank Of Sri Lanka

கடந்த ஆண்டு ஜனவரியில், ஏற்றுமதி வருவாய் 978 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இந்த ஆண்டு ஜனவரியில், 971 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

விவசாய மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது