நம் வாழ்வின் முக்கியமான நேரம் மீண்டும் வராது – ரகுமான்
நம் வாழ்வின் முக்கியமான நேரம் மீண்டும் வராது என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நேரலையில் பேசிய ரகுமான் “நான் நல்ல படங்களுக்கு நோ சொல்வதே இல்லை. ஆனால் ஒரு மிகப் பெரிய கூட்டமே எனக்கு எதிராக வதந்தியை பரப்பி வருகிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து பொலிவுட் திரையுலகம் குறித்த விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன. இதனையடுத்தே ஏ. ஆர்.ரகுமான் தனது ருவிட்டர் பக்கத்தில் “இழந்த பணம் மீண்டும் வரும். இழந்த புகழ் மீண்டும் வரும். ஆனால் நம் வாழ்வின் முக்கியமான நேரம் மீண்டும் வராது. அமைதியாக கடந்து செல்வோம். நாம் செய்ய நிறைய இருக்கிறது ”எனத் தெரிவித்துள்ளார்